கொன்னக்காடு ஒட்டுமொத்த ஊர் மக்களால் பாராட்டப்பட்ட கொன்னக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா🙏🙏🙏
🌟 கொன்னக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழாவானது 27.03.2015 அன்று நடைபெற்றது.
🌟 ஆண்டு விழாவினை தலைமையேற்று நடத்தி மாணவர்களுக்கு பாராட்டுதலையும், பரிசையும் வழங்கிய அறந்தாங்கி வட்டாரக் கல்வி அலுவலர் ஐயா மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் அம்மா அவர்களுக்கும் பள்ளியின் சார்பாக லட்சக்கணக்கான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
🌟 வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பள்ளி வளர்ச்சி பற்றிய ஆக்க சிந்தனைகள் கூறிய விதம் அருமை
🌟 தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத மாதிரி பள்ளி ஆண்டு விழாவை மாணவ மாணவிகளே முழுமையாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
🌟 ஊர் மக்கள் ஆண்டு விழாவைப் பாராட்டியும் வாழ்த்தியும் பேசிய விதம் அருமை - அவர்களுக்கும் வாழ்த்துகள்
🌟 அனைத்து நிகழ்ச்சிகளும் Realtech ict athani சேனவில் அதி நவீன தொழில் நுட்பத்துடன் ஒளிபரப்பப்பட்டது அருமை - வாழ்த்துகள்
🌟 அனைத்து நிகழ்ச்சிகளும் அனைவராலும் ரசிக்கப்பட்டது பாராட்டப்பட்டது💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
No comments:
Post a Comment