Friday, 28 March 2025

சீன மங்கலம் பள்ளியில் ஆண்டு விழா

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - சீனமங்கலம் அறந்தாங்கி ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்டம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டு விழா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌟 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சீனமங்கலம் பள்ளியில் ஆண்டு விழாவானது மிகச் சிறப்பாக நடைபெற்றது.
🌟 ஆண்டு விழாவினை வட்டாரக் கல்வி அலுவலர் ஐயா அவர்கள் தலைமையேற்று நடத்தி பள்ளியின் தலைமையாசிரியர் பற்றியும், பள்ளியின் சிறப்புகள் பற்றியும் பெற்றோர்களிடம் எடுத்துக் கூறிய விதம் அருமை.
🌟 ஆண்டு விழாவானது முழுவதும் HD முறையில் Live ஆக ஒளிபரப்பப்பட்டது அனைவராலும் பாராட்டப்பட்டது.
🌟 தலைமை ஆசிரியர் அவர்கள் நடத்திய குலுக்கல் பரிசு சீட்டு முறை பெற்றோர்கள் தங்கள் பெயர் வராத என ஆர்வமுடன் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக அமைந்தது மிகச் சிறப்பு - வாழ்த்துகள், பாராட்டுகள்.
🌟 மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், பாடல்களும் மிக அருமை - வாழ்த்துகள், பாராட்டுகள்💐💐💐💐

Thursday, 27 March 2025

ஊர் மக்கள் பாராட்டிய ஆண்டு விழா - கொன்னக்காடு

கொன்னக்காடு ஒட்டுமொத்த ஊர் மக்களால் பாராட்டப்பட்ட கொன்னக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா🙏🙏🙏

🌟 கொன்னக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழாவானது 27.03.2015 அன்று நடைபெற்றது.

🌟 ஆண்டு விழாவினை தலைமையேற்று நடத்தி மாணவர்களுக்கு பாராட்டுதலையும், பரிசையும் வழங்கிய அறந்தாங்கி வட்டாரக் கல்வி அலுவலர்  ஐயா மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்  அம்மா அவர்களுக்கும் பள்ளியின் சார்பாக லட்சக்கணக்கான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

🌟 வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பள்ளி வளர்ச்சி பற்றிய ஆக்க சிந்தனைகள் கூறிய விதம் அருமை

🌟 தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத மாதிரி  பள்ளி ஆண்டு விழாவை மாணவ மாணவிகளே முழுமையாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

🌟 ஊர் மக்கள் ஆண்டு விழாவைப் பாராட்டியும் வாழ்த்தியும் பேசிய விதம் அருமை - அவர்களுக்கும் வாழ்த்துகள்

🌟 அனைத்து நிகழ்ச்சிகளும் Realtech ict athani சேனவில் அதி நவீன தொழில் நுட்பத்துடன் ஒளிபரப்பப்பட்டது அருமை - வாழ்த்துகள்

🌟 அனைத்து நிகழ்ச்சிகளும் அனைவராலும் ரசிக்கப்பட்டது பாராட்டப்பட்டது💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

Thursday, 20 March 2025

TET பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு தேவை இல்லை - NCTE வழக்கில் திடீர் திருப்பம்

👉TET சார்ந்த உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் திடீர் திருப்பம் NCTE யின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட கருத்துக்கள் குறித்து ஆய்வு செய்து வரும் நீதிபதிகள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பட்டயப் சான்று பெற்றவர்கள் தொலைதூரக்கல்வி மூலம் படிக்க வாய்ப்பு இல்லை.    👉அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் மட்டுமே படித்து இருக்கவேண்டும்.  👉 ஆகையால்  NCTE விதிமுறைகள் படி முறையாக இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மேலும் ஒரு தேர்வு தேவை இல்லை என கருதப்படுகிறது      👉 தகுதி தேர்வு  தாள்-1      பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு தேவை இல்லை என தீர்ப்பு குறித்து இறுதி கட்ட ஆய்வுகள் நடைபெறுகின்றன .✍️ Government  advocate information...

Monday, 17 March 2025

Incometax புதிய முறைப்படி யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் - அட்டவணை 2025 - 26

கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய அரசு வருமான வரி உச்சம் வரம்பை உயர்த்தியது. இந்த வருமான வரி உச்சவரம்பு என்பது வரும் 2025 - 2026ம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்படும் 

மத்திய அரசு நிதிநிலை அறிக்கை தாக்களின் போது வெளியிடப்பட்டுள்ள வருமான வரி உற்சவ பாம்பின்படி எவ்வளவு வருமானத்திற்கு எவ்வளவு வருமான வரி என்ற அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இதில் 12 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோர் வருமான வரி கட்ட தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது   New Tax Regime முறைப்படி வரி செலுத்துவதற்கான உற்சவரம்பு ஆகும் 

Old Regime  முறைப்படி வருமான வரி செலுத்துவோர் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

 

 

மன்னகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் மன்ன குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்வின் சிறப்பு அடையாளங்கள் அருமை
💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍
🫷 ஆண்டு விழா அழைப்பிதழுக்கு மெனக் கட்டு invitation தயார் செய்தது மிகவும் சிறப்பானதாக இருந்தது.

🫷 இதுவரை இப்படியொரு invitation நான் பார்த்தது இல்லை
🫷 அனைத்து மாணவர்களுக்கும் கண்ணைக் கவரும் வண்ணம் அழகிய பரிசுப் பொருட்களும் சான்றிதழும்
🫷 நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு Shield சான்றிதழ் வழங்கியவை
🫷 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு விளையாட்டுச் சான்றிதழ் வழங்கியவை
🫷 வரவேற்பே உற்சாகமாக மகிழ்ச்சியாக வழங்கியது
🫷 சிறப்பான உபசரிப்பு
🫷 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு என அனைத்தும் பாராட்டும் வண்ணம் அமைந்தது சிறப்பு, மகிழ்ச்சி
🫷 தலைமை ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.
🫷 இருபால் ஆசிரியருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்🙏🙏🙏🙏🙏🙏💐💐🙏🙏

ஆசிரியரைப் போற்றும் ஓர் ஆசிரியர்💐💐💐💐

Thursday, 13 March 2025

பொருளாதர பின்தங்கிய மாணவர்களுக்கு படிக்க ஓர் அரிய வாய்ப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பிற்கு பிறகு படிக்க வைக்க ஆனந்தம் குழு தொடர் நடவடிக்கைகள் மூலம் படிக்க வைக்கிறது. அரிய வாய்ப்பு தவறவிடாதீர்கள். சரியான மாணவரை தலைமை ஆசிரியரும் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்யலாம்.

AK 47 News Aranthai Social Service யோடு Share செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

ஆனந்தம் குழுவிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் ..............

Sunday, 2 March 2025

தலைமையாசிரியர்களே...!!!! ஆசிரியர்களே....!!!!அரசியல் தலைவர்கள் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக , அந்தந்த கட்சிக்காரர்கள் வந்து குழந்தைகளுக்கு பரிசுப்பொருளோ , இனிப்போ வழங்கினால் , சிந்தித்து செயல்படவும்.


தலைமையாசிரியர்களே...!!!! ஆசிரியர்களே....!!!!அரசியல் தலைவர்கள்  பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ,  அந்தந்த கட்சிக்காரர்கள் வந்து குழந்தைகளுக்கு பரிசுப்பொருளோ , இனிப்போ வழங்கினால் , சிந்தித்து செயல்படவும்.

Saturday, 1 March 2025

பொது தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளின் கவனத்திற்கு*

*🔴⚡பொது தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளின் கவனத்திற்கு*

பிளஸ்-2 தேர்வுகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேர்வு தருகின்ற மன அழுத்தத்தால் மாணவர்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஆகவே, தேர்வு நேரத்தில், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், அவர்கள் நல்ல மதிப்பெண் பெற ஊக்குவிப்பதற்கும் உதவுகின்ற வகையில் உணவு முறைகளை அமைத்துக் கொள்ளவேண்டியது முக்கியம். அதுபற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணரான ரேணுகா தேவி சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். சென்னையை பூர்வீகமாக கொண்டவரான இவர், ஊட்டச்சத்து நிபுணராகவும், யோக முத்திரை நிபுணராகவும் திகழ்கிறார். ஊட்டச்சத்து உணவுகள் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வரும் ரேணுகா தேவி, யோகா முத்திரைகள் மூலம் நினைவாற்றல் திறனையும் மேம்படுத்துகிறார். இவர், பொது தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு தரும் ஆலோசனைகள்... 

 *காலை உணவு...* 

‘‘மூளை சீராக இயங்க அதிக ஆக்சிஜனும், சீரான ரத்த ஓட்டமும் அவசியம். எல்லா சத்துகளும் கொண்ட சமச்சீரான உணவு மட்டுமே மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். மூன்று வேளை சாப்பிட வேண்டும். என்ன காரணமாக இருந்தாலும் காலை உணவை தவிர்க்கக் கூடாது. காலை உணவு தான் உடலுக்கு அதிக சக்தியைத் தருகிறது. தேர்வு நேரத்தில் காலையும், மதியமும் நன்றாக சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவை காலை உணவுக்கும், இரவு உணவுக்கும் நல்லது. தோசை, பூரி, நூடுல்ஸ் போன்றவற்றை காலை வேளையில் தவிர்ப்பது நல்லது. தேவைப்பட்டால், தினை பொங்கல், சேவை நூடுல்ஸ் போன்றவைகளை காலை உணவாக சாப்பிடலாம். 

 *மன அழுத்தம் நீங்க...* 

அரிசி சாதம், தக்காளி சாதம், பருப்பு சாதம், ரசம் சாதம், கீரை சாதம் மதிய உணவுக்கு நல்லது. புளியோதரை, லெமன் சாதம் போன்ற புளிப்புள்ள சாத வகைகளைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் இரவில் வயிறு நிறைய சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இரவில் படுக்கச்செல்லும் போது பால் சாப்பிடலாம். பாலில் உள்ள ‘டிரிப்டோபென்' எனும் அமினோ அமிலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கும் அற்புத மருந்து. அதுமட்டுமல்ல, மூளையில் நினைவாற்றலுக்கு உதவும் நரம்பு செல்களை உறுதியாக வைத்திருப்பதும் இதுதான். 

*மோர் அவசியம்...* 

மதிய உணவில் தினமும் ஒரு பருப்பு, ஒரு கீரை, ஒரு காய்கறி, தயிருக்கு மாற்றாக நீர் மோர் இருக்க வேண்டும். கேரட், பீட்ரூட், அவரை, முட்டைக்கோஸ் போன்ற அடர்ந்த நிறமுள்ள காய்கறிகள் தேர்வு நேரத்தில் ஏற்றவை. மூளையை இயக்குகின்ற சத்து இவற்றிலிருந்து கிடைக்கும். வைட்டமின் ஏ நிறைந்த முருங்கைக் கீரை கண்களுக்கு மிகவும் நல்லது. மாணவர்கள் அதிக நேரம் படிக்கும் போது கண்ணில் எரிச்சல் ஏற்படாமல் பாதுகாக்கும். தேர்வு நேரத்தில் ஏற்படுகின்ற மன அழுத்தத்தால் மாணவர்களுக்கு வயிற்றில் அதிகமாக அமிலம் சுரந்து அல்சர், அஜீரணம் போன்றவை தலை காட்டும். மோர், அமிலம் சுரப்பதைக் கட்டுப்படுத்துவதோடு, ஜீரண சக்தியை ஒழுங்குபடுத்தும். 

*மாலை நேர ஸ்நாக்ஸ்* 

 மாலை நேரத்தில் சுண்டல், வேகவைத்த வேர்க்கடலை, பாதாம் பருப்பு, தேனில் ஊறவைத்த பேரீட்சை, அத்திப்பழம், முளைகட்டிய பயறுகள், காய்கறி சாலட், பழ சாலட் போன்றவற்றை சாப்பிடலாம். பாதாம் பருப்பில் உள்ள ‘செலினியம்' நினைவாற்றலுக்கு மிக நல்லது. ஊறவைத்த பாதாமை அரைத்து சூடான பாலில் கலந்து தினமும் இரண்டு வேளை குடிப்பது படித்தது மறக்காமல் இருக்க உதவும். 

*பழம் நல்லது...* 

 தேர்வு நேரங்களில் நோய்வராமல் பாதுகாக்க வேண்டுமானால் தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிட வேண்டும். பழங்களில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவுகிறது. வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, தக்காளி, பப்பாளி ஆகியவை உடனடியாக புத்துணர்வைத் தருபவை’’- இவ்வாறு தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு ஊட்டச்சத்து நிபுணர் ரேணுகா தேவி அதுதொடர்பான தகவல்களை வழங்கி, புத்துணர்வை ஊட்டினார். 

*முத்திரை...* 

 மறந்த விஷயங்களை நினைவுக்கு கொண்டு வருவதில் யோக முத்திரைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்தவகையில் தேர்வறையில் படித்த பாடங்கள் மறந்துபோனால், சின் முத்திரையை செய்து பாருங்கள். மோதிர விரலும், கட்டை விரலும் தொடும்படி மற்ற விரல்களை நேராக நீட்டுங்கள். இப்படி செய்யும்போது, படித்த விஷயங்கள் நினைவுக்கு வரும். திரும்பவும் கூறுகிறேன்.... படித்த விஷயங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். 

*இரவு கண்விழித்து படிக்கும்போது...* 

மாணவர்கள் தூக்கம் வராமல் இருக்க காபி, டீ அருந்துவது வழக்கம். ஆனால் இவையும் மந்தத்தன்மையை உண்டாக்கும். இவற்றுக்கு பதிலாக, இரவில் சூடான பால், லெமன் டீ, காலையில் எலுமிச்சை பழச்சாறு அல்லது காய்கறி சூப், கீரை சூப் சாப்பிடலாம். தண்ணீர் நிறைய பருகுவது, படிக்கும் போது ஏற்படுகின்ற தலைவலியைக் குறைக்கும். படிக்கின்ற நேரத்தில் சிப்ஸ், சீவல் போன்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிட வேண்டாம். தேர்வு முடியும் வரை கொழுப்பு மிகுந்த அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. முடியாத பட்சத்தில் மீன், முட்டை சாப்பிடலாம். அதுவும் இரவில் நிச்சயம் வேண்டாம். கொழுப்பு உணவு மூளையை மழுங்கடித்து தூக்கத்தை வரவழைக்கும். 
  
*தேர்வுக்கு செல்வதற்கு முன்...* 

 பரீட்சைக்கு செல்லும் முன்பு, சப்போட்டா, அத்தி இது போன்ற பழங்களை அதிகமாக சாப்பிடலாம். வால்நட்ஸ், பாதாம், உலர் திராட்சை, பேரீட்சை போன்றவை நல்ல ஆற்றலை கொடுக்கும் என்பதால் தேர்வுக்கு செல்லும் முன்பு இவற்றை சாப்பிடலாம். பசி தாங்கும். 

 *துரித உணவுகள்..* 

 குழந்தைகளுக்கு இனிப்பு சாக்லெட், நூடுல்ஸ், பாஸ்ட் புட் போன்றவை ரொம்ப பிடிக்கும். ஆனால் தேர்வு முடியும் வரை அவற்றை தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக, பாதாம், வால்நட், பேரீட்சை இவை மூன்றையும் நன்றாக அரைத்து, லட்டு போல உருவாக்கி உண்ண கொடுக்கலாம். இது படிக்கும்போதும், தேர்விற்கு செல்லும்போதும் சிறப்பான ஸ்நாக்ஸாக இருக்கும்.

டீசரில் மெகா சாதனை - GBU

தமிழில் முதல் படம்...அஜித்தின் 'குட் பேட் அக்லி' டீசர் படைத்த சாதனை
 மார்ச் 2, 8:20 am

 இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

கடந்த 28-ம் தேதி 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் தற்போது பலரது பார்வைகளை கடந்துவரும்நிலையில், இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை குட் பேட் அக்லி படம் படைத்திருக்கிறது. அதன்படி, 32 மில்லியன் பார்வைகளை இது கடந்திருக்கிறது.

வாழ்க்கையில் நான் உணர்ந்த 15 வாழ்க்கைப் பாடங்கள்!*_

_*Motivation*_
_*வாழ்க்கையில் நான் உணர்ந்த 15 வாழ்க்கைப் பாடங்கள்!*_


* 🌹🌹🌹வாழ்க்கை எனும் பயணத்தில் நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறோம், அனுபவிக்கிறோம். சில நேரங்களில் நாம் தடுமாறுகிறோம், சில நேரங்களில் உற்சாகமாக முன்னேறுகிறோம். நான் என் வாழ்க்கையில் கற்ற சில முக்கியமான பாடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவை எனக்கு உதவியது போல உங்களுக்கும் உதவும் என்று நம்புகிறேன்.

1. தனிமை ஒரு வலிமை; உனக்கு நீயே முதல்ல தேவைன்னு அது உனக்குப் புரிய வைக்கும். (Being alone is powerful; it helps you realize you need yourself more.)

2. உன்னை நீயே நல்லா தெரிஞ்சுக்கிட்டா, அடுத்தவங்க அங்கீகாரம் உனக்கு பெருசா தேவைப்படாது. (The more you know yourself, the less you need approval from others.)

3. நீ தனியா இருக்குறதுக்கு கம்பர்ட்டபிளா இல்லன்னா, நீ ஒருத்தரோட இருக்கிறது அன்புனாலயா, இல்ல தனிமை பயத்துனாலயானு உனக்கே தெரியாது. (Until you’re comfortable being alone, you won’t know if you're with someone out of love or loneliness.)

4. மனசு அமைதியா இருக்கும்போது பயம் உருவாகும்; ஆனா செயல் செஞ்சா அந்த பயம் போயிடும். (We create fears when we sit still; we overcome them by taking action.)

5. உன் பயத்தை நேருக்கு நேரா பாரு; இல்லன்னா அது உன்னை தோற்கடிச்சிடும். (Face your fears, or they will defeat you.)

6. தப்பான முடிவு எடுக்கணும்னு நினைச்சா, எல்லார்கிட்டயும் போய் கேளு. (If you want to make the wrong decision, ask everyone.)

7. வளர்ச்சி உனக்கு கஷ்டமான இடத்துல தான் நடக்கும். (Growth happens outside your comfort zone.)

8. நீ எதை பத்தி யோசிக்கிறியோ, அதையே நீ வாழ்க்கையில கொண்டு வருவ. (What you think about, you bring about.)

9. செயல் பயத்தை ஜெயிக்கும்; தயக்கம் அதை உயிரோட வெச்சிருக்கும். (Action conquers fear; hesitation keeps it alive.)

10. உனக்கு நீயே மரியாதை கொடுத்தா தான், அடுத்தவங்க உனக்கு மரியாதை கொடுப்பாங்க. (Self-respect earns respect from others.)

11. நீ உன்னை மாத்திக்காம, உன்னை சுத்தி இருக்கிறத மாத்த முடியாது. (You can’t change your surroundings until you change yourself.)

12. சின்ன அடி எடுத்து வெச்சா கூட, அது உன் வாழ்க்கையில பெரிய மாற்றத்த கொண்டு வரும். (Small steps in the right direction can lead to the biggest changes in your life.)

13. உன் மன அலைவரிசைக்கு ஏத்த மாதிரி தான், உனக்கான ஆட்கள் உன்னை தேடி வருவாங்க. (Your vibe attracts your tribe.)

14. சில சமயம் நல்ல விஷயங்கள் உடைஞ்சு போனா தான், அதைவிட நல்ல விஷயங்கள் ஒண்ணா சேரும். (Sometimes, good things fall apart so better things can come together.)

15. பொறுமைன்னா வெறுமனே காத்து இருக்கிறது இல்ல; காத்து இருக்கும் போது நீ எப்படி நடந்துக்கிறன்றதுல இருக்கு. (Patience is not just waiting, but how you act while waiting.)

இந்தப் பொன்மொழிகள் அனைத்தும் நான் அனுபவத்தில் உணர்ந்தவை. இவை உங்களுக்கு ஒரு சிறிய உந்துதலை கொடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சியே. வாழ்க்கையை நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் எதிர்கொள்ளுங்கள்.


🌹🌹🌹

களஞ்சியம் App மிக மிக கவனம் தேவை

🌹🌹🌹அனைவருக்கும் வணக்கம்!! களஞ்சியம் செயலி மூலம் மருத்துவவிடுப்பை உள்ளீடு செய்த போது சரியான விவரங்கள் பதிவேற்றம் செய்திடாதவர்களுக்கு சம்பளமில்லா விடுப்பாக களஞ்சியம் செயலி எடுத்து கொண்டு பிப்ரவரி மாத ஊதியத்தில் Loss Of Pay என்று கணக்கில் கொண்டு மற்ற நாட்களுக்கு மட்டும் ஊதியம் மற்றும் பிற படிகள் வந்து உள்ளது! களஞ்சியம் செயலியில் Cl தவிர மற்ற விடுப்புகளை பதிவிடும் போது மிக கவனமாக செயல்படுங்கள் நன்றி .👆👆👆


IFHRMS kalanjium leave apply...

Salary deduction???

தற்போது நமது விடுப்பு களை களஞ்சியம் வழியாக விண்ணப்பித்து வருகிறோம்...

CL/RL தவிர பிற விடுப்பு எனில் *சம்பளம் பிடித்தம்* செய்கிறது என்று குற்றச்சாட்டு பரவலாக வருகிறது 🙏

1) *சரியான விடுப்பு* தான் விண்ணப்பித்து உள்ளாரா என்பதை *உறுதி செய்து* கொள்ளுங்கள்..

நாம் மருத்துவ விடுப்பு *ML* என்று சொல்லும் விடுப்பின் உண்மையான பெயர்

 *மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு* .

 *Unearned Leave on MC* ( medical certificate).

சிலர் *EOL with MC* என தவறாக விண்ணப்பித்து விடுகிறார்கள்.

( இது *loss of pay* விடுப்பு)

எனவே *leave approval* செய்யும் முன் *விண்ணப்பித்த விடுப்பு* சரியா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்


💐💐💐💐